மைசூரு – தர்பங்கா 27ல் சிறப்பு ரயில்
பெங்களூரு: மைசூரு – தர்பங்கா இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணியர் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், மைசூரில் இருந்து பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு, வரும் 27ம் தேதி முதல், அடுத்த மாதம் 24ம் தேதி வரை, செவ்வாய்கிழமைகளில் மட்டும், சிறப்பு ரயில் 06211 இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக வரும் 31ம் தேதி முதல், அடுத்த மாதம் 28ம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும், சிறப்பு ரயில் 06212 இயங்கப்பட உள்ளது. இந்த ரயில்கள், மாண்டியா, பெங்களூரு சிட்டி, யஷ்வந்த்பூர், துமகூரு, அரிசிகெரே, தாவணகெரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவி, ராய்பாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.