உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டப்படியே மைசூரு தசரா நடந்தது பிரமோதா தேவிக்கு முதல்வர் சிவகுமார் பதில்

சட்டப்படியே மைசூரு தசரா நடந்தது பிரமோதா தேவிக்கு முதல்வர் சிவகுமார் பதில்

பெங்களூரு: ‘‘ஜனநாயக அமைப்பு இல்லாமல் இருந்தால், அவர்கள் சொன்ன அனைத்தையும் கேட்டிருப்போம். இப்போது விதிகளை பின்பற்ற வேண்டும். ஜனநாயகம், சட்டம் மற்றும் மரபுகளை மனதில் கொண்டு, மைசூரு தசராவை கொண்டாடினோம்,’’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். அவர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: மைசூரு தசரா, அரசு நிகழ்ச்சி; அது, எனது நிகழ்ச்சி அல்ல. எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு இருந்தால், அதை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். பிரமோதா தேவி அளித்த முழு அறிக்கையையும் நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் கூறியதை குறித்துக் கொண்டு, அவரிடம் பேசுவேன். இது என் தனிப்பட்ட பிரச்னையும் அல்ல; பிரமோதா தேவியின் தனிப்பட்ட பிரச்னையும் அல்ல. இது, ஒட்டுமொத்த மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். துவக்கத்தில் இருந்தே அரச குடும்பத்துக்கு எவ்வாறு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தின்படியே அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அந்த பழைய முறையையே தொடர்கிறோம். எனக்கு வரலாற்றின் அனைத்து நுணுக்கங்களும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் பாரம்பரியத்தை மதிக்கிறோம். ஜனநாயக அமைப்பு இல்லாமல் இருந்தால், அவர்கள் சொன்ன அனைத்தையும் கேட்டிருப்போம். இப்போது விதிகளை பின்பற்ற வேண்டும். ஜனநாயகம், சட்டம் மற்றும் மரபுகளை மனதில் கொண்டு மைசூரு தசராவை கொண்டாடினோம். அம்பாரியை சுமந்து செல்ல மற்றொரு யானையை கொண்டு வர நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இறுதியாக சாந்தமான ஒரு யானை தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த யானை கொண்டு வரப்பட்டது. அனைத்திற்கும் அரண்மனையிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், நான் அந்த பழக்கம் குறித்து விசாரிப்பேன். மைசூரு தசரா போன்ற பெரிய விழாவை ஏற்பாடு செய்வது அவ்வளவு எளிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ