மேலும் செய்திகள்
நுகர்வு முடிவுகளை தள்ளிப்போடுவது பலன் தருமா?
08-Sep-2025
பெங்களூரு: நந்தினி பொருட்களின் விலை, இன்று அல்லது நாளைக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் தயாரிப்பான நந்தினி பால் பொருட்கள் மாநிலத்தில் பிரபலமானவை. தற்போது, கர்நாடகாவை தாண்டி பல மாநிலங்களிலும் நந்தினியின் தயாரிப்புகள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றின் விலை சற்று அதிகமாக இருப்பதாக மக்கள் கவலைப்பட்டு வந்தனர். இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பாலில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நந்தினி பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், புதிய விலை குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. புதிய விலையை நிர்ணயிப்பது குறித்து கே.எம்.எப்., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் புதிய விலை விபரங்கள் வெளியாகும். இதன் மூலம் அனைவருக்கும் விருப்பமான நந்தினியின் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்த முடியும்.
08-Sep-2025