உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு மருத்துவமனையில் அலட்சியம்; குழந்தையை மாற்றி நர்ஸ்கள் குளறுபடி

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; குழந்தையை மாற்றி நர்ஸ்கள் குளறுபடி

ராய்ச்சூர் : சிந்தனுார் அரசு மருத்துவமனையில், பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கூறி, பெண் குழந்தையை கொடுத்து, மருத்துவ ஊழியர்கள் குளறுபடி செய்துள்ளனர். இது தொடர்பாக, போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் தாலுகாவின், காந்திநகரில் வசிப்பவர் ஹுல்லப்பா. இவரது மனைவி ரேவதி. ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலி துவங்கியதால், இரண்டு நாட்களுக்கு முன், இவரை சிந்தனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். நேற்று முன் தினம் காலை, அவருக்கு சிசேரியன் நடந்தது.சிசேரியன் நடந்த சில மணி நேரங்களுக்கு பின், நர்ஸ் ஒருவர் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்ப்பால் தாருங்கள் என, கூறி குழந்தையை கொடுத்தார். தாய்ப்பால் புகட்டிய போது, மீண்டும் எங்களால் தவறு நடந்து விட்டது. உங்களுக்கு பிறந்தது பெண் குழந்தை. இந்த ஆண் குழந்தை உங்களுடையது அல்ல என, கூறி குழந்தையை கொண்டு சென்றார்.இதனால் குடும்பத்தினர் கோபமடைந்துள்ளனர். 'மருத்துவமனையில் குழந்தைகள் மாற்றப்படுகின்றன. இதில் டாக்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது. ஆண் குழந்தை எங்களுடையது. வேண்டுமானால் டி.என்.ஏ., பரிசோதனை செய்யட்டும்' என ரேவதியின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.இது தொடர்பாக, சஹரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குழந்தை மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தும்படி கோரியுள்ளனர்.இவர்களின் குற்றச்சாட்டை, மருத்துவமனை டாக்டர் நாகராஜ் காட்வா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''ரேவதிக்கு சிசேரியன் செய்ததே நான்தான். அவருக்கு பிறந்தது பெண் குழந்தைதான். ''நர்ஸ்களின் குளறுபடியால் பெண் குழந்தைக்கு பதில், ஆண் குழந்தையை கொடுத்துள்ளனர். இது பெற்றோரின் சந்தேகத்துக்கு காரணமாகியுள்ளது. அவர்கள் விரும்பினால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை