உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்

பெங்களூரு:ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நலனுக்காக, இதய ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்த, சுகாதாரத்துறை தயாராகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று அளித்த பேட்டி: மாநில அரசு ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நலனை மனதில் கொண்டு, இதய ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத் துறை தயாராகி வருகிறது. இத்திட்டம் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து, ரத்த அழுத்தம், நீரிழிவை கட்டுப் படுத்த உதவும். ஓட்டுநர்களுக்கு இலவச இதய பரிசோதனை நடத்தப்படும். மாரடைப்பு அபாயத்தில் உள்ளவர்களை, ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தடுத்து, உயிரை காப்பாற்ற திட்டம் உதவியாக இருக்கும். பள்ளி பாடத்திட்டங்களில், சிறார்களுக்கு ஆரோக்கியம், ஒழுங்கான வாழ்க்கை தரம் பற்றிய பாடத்தை சேர்க்க, அரசு ஆலோசிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி