உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

பசு கன்று கொலை

கதக் மாவட்டம் ஏ.பி.எம்.சி., கால்நடை மார்க்கெட் பகுதிக்கு அருகே பசுவின் கன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பசுவின் தலையை வெட்டி நாச செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

---------ஆதரவற்ற குழந்தைகள்

பெங்களூரு வடக்கு தாலுகா குட்டஹள்ளியில் வசித்து வந்தவர் சவுபாக்யா, 31. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கோவில்களில் வேலைக்கு சென்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீளாத அவர், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

ஹெச்.ஐ.வி., விழிப்புணர்வு

உலக ஹெச்.ஐ.வி., விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நேற்று பெங்களூரில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் என பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடத்தியது. இதில், ஏராள மாணவர்கள் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழா

பெங்களூரு எலஹங்காவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 3,686 இளங்கலை, 1,233 முதுகலை, 34 முனைவர் பட்டம் என மொத்தம் 4,953 மாணவர்கள் பட்டம் வாங்கி அசத்தினர். துறையில் சிறந்து விளங்கிய 32 பேருக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்பட்டது.

முதிய தம்பதி மர்மச்சாவு

சிக்கபல்லாபூர் குடிபண்டே தாலுகாவில் வாடகை வீட்டில் அஸ்வதப்பா, 70, ஹனுமக்கா, 60, என்ற முதிய தம்பதி, தங்கள் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் கதவு, சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று வீட்டின் கதவை உடைத்து குடிபண்டே போலீசார் உள்ளே சென்றனர். இருவரும் இறந்து கிடந்தனர். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

யானை சண்டை வைரல்

ஹாசன் பேலுார் தாலுகா ஜகபோரனஹள்ளியில் பீமா, கேப்டன் ஆகிய இரண்டு யானைகள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை