உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

தர்ஷனுடன் சந்திப்பு

சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், இளம் நடிகர் தன்வீர் கவுடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில், தன்வீர் கவுடா நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று, தர்ஷனை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார்.

வீடியோ வெளியானது

தாவணகெரே டவுன் ஜெயதேவா சதுக்கம் பகுதியில், செப்டிங் டேங்க் கழிவுகளை, இரு தொழிலாளர்கள், தங்கள் கைகளால் அகற்றிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உறுதி

''பெலகாவி கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிடும் தீர்மானத்தை, பெலகாவி மாநகராட்சியில் நிறைவேற்றுவோம். இதுகுறித்து சட்டதுறையின் கருத்தை கேட்பேன்,'' என்று, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா கூறியுள்ளார்.

ஆயுள் தண்டனை

தட்சிண கன்னடாவின் பன்ட்வாலில் நகைக்கு ஆசைப்பட்டு பெனடிக் கார்லோ, 80, என்பவரை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில், வில்மா பிரசிதா, 30, சதீஷ், 33, சரண் குமார், 34, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு 2 வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜோதி நாயக் நேற்று தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !