உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

மங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலையில் கைதான சந்தோஷ் ராவ் விடுதலை ஆனதன் பின்னணியில், சவுஜன்யாவின் தாய் மாமா விட்டல் கவுடா பங்கு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்.ஐ.டி.,யிடம், வக்கீல் அம்ருதேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். பெங்களூரு: கோமுல் எனும் கோலார் – சிக்கபல்லாபூர் மாவட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பணி நியமனம் தொடர்பாக, கோலாரின் மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை, உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. பெங்களூரு: சர்ச்சைக்குரிய படத்ைத பேஸ்புக்கில் பகிர்ந்ததாக, ஷிவமொக்காவை சேர்ந்த நாகேஷ் என்பவர் மீது பதிவான வழக்கை, உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. பெங்களூரு: கிராமத்து முட்டாள் போன்று பேசுவதாக என்னை பற்றி, அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார். அவரை போன்று புத்தர், அம்பேத்கர் பெயரில் நான் கொள்ளையடிக்கவில்லை என மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !