உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிருங்கேரி கோவிலில் நிகில் மகனுக்கு எழுத்து பயிற்சி

சிருங்கேரி கோவிலில் நிகில் மகனுக்கு எழுத்து பயிற்சி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி மடம் மிகவும் பிரசித்தி பெற்றாகும். இங்கு குடிகொண்டுள்ள சாரதாம்பிகை, கல்விக் கடவுளாக போற்றப்படுகிறார். குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து, எழுத்து பயிற்சி அளித்தால் படிப்பு நன்றாக வரும் என்பது ஐதீகம்.இதே காரணத்தால், பெற்றோர், தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன், சிருங்கேரி சாரதாம்பிகை மடத்துக்கு அழைத்து வந்து, எழுத்து பயிற்சி அளிக்கின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி, நேற்று சிருங்கேரி சாரதா மடத்துக்கு, தன் மனைவி ரேவதி, மகன் அவ்யான் தேவுடன் வருகை தந்தார். சாரதாம்பிகையை தரிசனம் செய்தார். மடாதிபதி பாரதி தீர்த்த மஹா சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.அதன்பின் சாரதாம்பிகை கோவிலில், தன் மகன் அவ்யான் தேவுக்கு எழுத்து பயிற்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை