உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெட்ரோல் நிலையங்களில் கலப்படமில்லை: சிவகுமார்

பெட்ரோல் நிலையங்களில் கலப்படமில்லை: சிவகுமார்

பெலகாவி: ''பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கலக்கப்படுவதில்லை; அது வினியோகிக்கப்படும் இடத்திலேயே கலக்கப்படுகிறது,'' என முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நாங்கள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, 67 இடங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தி உள்ளோம். 'மைலேஜ் குறைந்துள்ளது; இன்ஜின் பழுதடைகின்றன' என ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள், எங்களிடம் புகார் அளித்து உள்ளனர். நாங்கள் முதலில் இது குறித்து விசாரித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். உணவு பொது வினியோக துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், நாளை (இன்று) இது குறித்து விரிவாக விளக்குவார். 'இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று மத்திய அரசால் மூடி மறைக்க முடியும். நாங்கள் சரிபார்த்துவிட்டோம். பெட்ரோல் நிலையங்களில் எத்னால் கலக்கப்படுவதில்லை; அவை வினியோகிக்கப்படும் இடங்களில் தான் கலக்கப்படுகிறது என்று எங்களுக்கு அறிக்கை கிடைத்து உள்ளது. குறைந்த விலையில் எத்னால் கிடைக்கிறது என்று கூறி, அதை பெட்ரோலுடன் அதிகமாக கலந்து லாபம் ஈட்டுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. எதிர்க்கட்சிகள் இது பற்றி பேசவில்லை; அசோக் அண்ணாவும் பேசவில்லை; விஜயேந்திராவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை