தேசிய விழாவில் அரசியல் வேண்டாம்
தசரா துவக்க விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: தசரா மற்றும் நம் கலாசார மகத்துவம் பற்றி தெரியாதவர்கள், பானு முஷ்டாக்கை எதிர்த்தனர். வரலாற்றை திரித்து, சுயநல அரசியல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம். அரசியல் செய்ய போகிறோம் என்றால், அதை தேர்தலில் செய்வோம். தசரா விழாவில் கீழ்த்தரமான அரசியல் செய்வது அற்பமானது. தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதை, நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் வரவேற்றுள்ளனர். இது பெருமையான விஷயம். மனிதர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ வேண்டும். வெறுப்பு மனித குலத்தின் எதிரி. வெறுப்பை கொண்டாடுபவர்கள், மனித குலத்தின் எதிரிகள். அரசியலமைப்பு சட்டத்தின்படி, அனைத்து ஜாதிகள், மதங்கள், கட்சிகளை சேர்ந்த ஏழைகளுக்கு நாம் வாக்குறுதிகளை செயல்படுத்தி உள்ளோம். வாக்குறுதி திட்ட பயன்பெறுபவர்களில் பா.ஜ.,வினர் இல்லையா? இந்த வாக்குறுதிகள் நிற்காது. எங்கள் வாக்குறுதிகள் காரணமாக, எங்கள் மாநிலத்தில் உள்ள மக்களின் தனி நபர் வருமானம், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இப்போது நாங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் முதல் இடத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.