தேங்கும் நீர் அல்ல!
அரசியல் என்பது தேங்கி நிற்கும் நீர் அல்ல; எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீரை போன்று. காலத்துக்கு தகுந்தபடி மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், நம் மாநிலத்தில் மாற்றங்கள் நடக்காது. காங்கிரஸ் மேலிடத்துக்கு, நான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். மேலிட தலைவர்கள் பீஹார் தேர்தலில், பிசியாக உள்ளனர். எனவே நேரில் சந்திக்க வாய்ப்பளிக்கவில்லை. இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து, கடிதத்தில் விவரித்துள்ளேன். அமைச்சர் பதவி தரும்படி, யாரிடமும் கேட்கவில்லை. மேலிட தலைவர்களுக்கு என்னை பற்றி, தவறான கருத்து ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து விளக்கம் அளிக்க, நான் தலைவர்களை சந்திக்க வேண்டும். இதற்கு முன்பு நான் அனுப்பிய கடிதத்தை பார்த்தார்களோ, இல்லையோ தெரியவில்லை. இன்னும் பதில் வரவில்லை. எனவே மீண்டும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.