உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்

 மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்

மைசூரு: ஒடிஷாவில், பா.ஜ.,வின் ஆபரேஷன் தாமரைக்கு பயந்து, பிடதிக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மைசூரு நகரை சுற்றிப் பார்த்தனர். ஒடிஷாவில் பா.ஜ., அரசு உள்ளது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு நாளை, 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க, அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், பாதுகாப்பிற்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் நேற்று காலை பிடதியி ல் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மைசூருக்கு புறப்பட்டனர். மைசூரில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர். பின், அம்பா விலாஸ் அரண்மனையை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !