கைதிகள் சாகுபடி செய்த காய்கறிகள் ஆர்வத்துடன் வாங்கிய அதிகாரிகள்
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் விளைவித்த காய்கறிகளை சிறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி அருகில், 100 ஏக்கரில் திறந்த வெளி சிறை உள்ளது. இதில், 65 ஏக்கரில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் ஆயிரக்கணக்கான கைதிகள் விவசாயம் செய்கின்றனர். பீன்ஸ், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய் உட்பட பல விதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள் பயிரிடுகின்றனர். பன், கேக், பிஸ்கட் போன்ற பேக்கரி தின்பண்டங்களும் தயாரிக்கின்றனர். இவர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள், பேக்கரி தின்பண்டங்களை விற்க, சிறைத்துறை மத்திய அலுவலகம் முன் பகுதியில், நேற்று முன்தினம் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. சந் தையில், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் உட்பட, சிறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வத்துடன் காய்கறிகள், பழங்கள், பேக்கரி தின்பண்டங்களை வாங்கி சென்றனர். டி.ஜி.பி., அலோக் குமார் கூறியதாவது: தேவனஹள்ளி அருகில் கைதிகள், விவசாயம் செய்து காய்கறிகள், பழங்கள் விளைவிக்கின்றனர். இவர்கள் பயிரிடும் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், கீரைகள் தினமும் ஹாப்காம்ஸ் மூலம் நேரடியாக மக்களுக்கு விற்கின்றனர். இதனால், கைதிகளுக்கு அன்றாடம் கூலி கிடைப்பதுடன், விவசாயம் செய்யும் திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கிறது. திறந்தவெளி சிறையில் விளைவித்த உற்பத்தி பொருட்கள், மத்திய சிறையில் தயாரித்த பேக்கரி தின்பண்டங்கள், ஷர்ட், போர்வை உட்பட, பல்வேறு பொருட்களை மத்திய அலுவலகம் வளாகத்தில் விற்பனை செய்ய, ஏற்பாடு செய்ய ப்படுகிறது. இன்னும் சில நாட்களி ல், மொபைல் வாகனம் வரவுள்ளது. இதன் மூலம் முக்கியமான இடங்களில், காய்கறிகள், மற்ற தயாரிப்புகள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.