உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது

கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது

கோலார்: ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையமாக வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.இந்தியாவின் பல்வேறு நகரங்களில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதை மையமாக வைத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது, சைபர் கிரைம் போலீசார் கண் வைத்து உள்ளனர்.இந்நிலையில் கோலார் சைபர் கிரைம் போலீசார், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை வைத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முல்பாகல் டவுன் நுாக்கல்பண்டேயின் சையத் சாதிக், 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.போட்டிக்கு முன்பாகவே, சூதாட்டத்தில் ஈடுபடுவோரிடம் இருந்து, பணம் வசூலித்தது தெரிந்தது. இவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், 32,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ