உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெங்களூரில் நாளை பேரணி

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெங்களூரில் நாளை பேரணி

ஷிவமொக்கா : ''ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், நாளை பெங்களூரில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடக்கிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார்.ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேசிய தலைவர் ஜே.பி., நட்டா அறிவுறுத்தலின் படி, ஆப்பரேஷன் சிந்துாரின் வெற்றியை கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தப்படும்.நாளை பெங்களூரு, மல்லேஸ்வரம் சம்பிகே சாலையில் உள்ள ஷிரூர் பூங்காவில் இருந்து முற்பகல் 11:00 மணிக்கு பேரணி துவங்கி, மல்லேஸ்வரம் 18வது கிராஸ் வரை செல்லும். இதில், பா.ஜ., தொண்டர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், விவசாயிகள், பொது மக்கள், பெண்கள் என 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். கட்சி கொடி எதுவும் பயன்படுத்தப்படாது. இது அரசியல் சார்ந்த பேரணி அல்ல.வரும் 16, 17ம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடக்கும். ஷிவமொக்காவில் 16ல் நடக்கும் பேரணியில் நான் பங்கேற்கிறேன். 18 முதல் 23 வரை தாலுகா அளவில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ