மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
11-Oct-2026
மைசூரு: மைசூரு அரண்மனை குறித்து, அமைச்சர் யதீந்திராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., – ம.ஜ.த., கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மைசூரு அரண்மனை, அரண்மனை இடம் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது’ என, நகர் புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு, மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதாதேவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அமைச்சர் யதீந்திராவின் கருத்து கண்டித்து, மைசூரு கோட்டை ஆஞ்சநேயசுவாமி கோவில் முன், பா.ஜ., – ம.ஜ.த., கட்சியினர் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யதீந்திரா மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். யதீந்திரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இப்போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
11-Oct-2026