உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் 7 நாளில் அறிக்கை அளிக்க உத்தரவு

மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் 7 நாளில் அறிக்கை அளிக்க உத்தரவு

பெங்களூரு: மைசூரில் 40 மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு, துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டு உள்ளார்.மைசூரு நகரின் வெங்கடலிங்கய்யா சதுக்கத்தில் இருந்து காளிகாம்பா கோவில் வரையிலான ஹைதர் அலி சாலையை அகலப்படுத்துவதற்காக, இச்சாலையின் இருபுறத்திலும் இருந்த 40 மரங்கள் வெட்டப்பட்டன.மைசூரு மாநகராட்சியின் செயலுக்கு அனைத்து தரப்பு மக்களும், கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டமும் நடத்தினர்.இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, மைசூரு வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம்:அதிக அளவிலான மரங்களை வெட்டுவது, மனிதர்களை கொல்வதற்கு சமம் அல்லது அதை விட மோசமானது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ஆனால், ஹைதர் அலி சாலையில் தேவையின்றி 40 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இதற்கு வனத்துறை அனுமதி அளித்தது ஏற்க முடியாதது. சாலையை அகலப்படுத்த தேவையில்லை என்று இம்மாதம் 19ம் தேதி ஊடகத்தினரும் செய்திகள் வெளியிட்டு உள்ளனர். அன்றைய தினம் இயற்கை ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைவரும் மவுன போராட்டம் நடத்தி உள்ளனர்.புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை, உலகமே எதிர்கொண்டு உள்ளது. இந்நிலையில், மரங்களை பாதுகாப்பது நமது கடமை. உயிர், வாழ்வாதாரம், வளர்ச்சி இருக்க வேண்டும், இயற்கை சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.சாலை விரிவாக்கம்; மரங்கள் வெட்டுவது அவசியமா என விசாரணை நடத்தி, ஏழு நாட்களுக்குள், சி.சி.எப்., பதவியில் உள்ள அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ