மேலும் செய்திகள்
டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு
05-Apr-2025
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான நில மறு அறிவிப்பு வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கர்நாடக பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா. 2006ல் பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்தார்.அப்போது தொழில்நுட்பப் பூங்கா அமைக்க கர்நாடக தொழில் துறை பகுதி மேம்பாட்டு வாரியத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியை சட்ட விரோதமாக தனக்கு தெரிந்தவர்களுக்கு விடுவித்ததாகவும், இதனால் அரசின் கருவூலத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது.சமூக ஆர்வலர் ஆலம் பாட்ஷா, லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். எடியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆலம் பாட்ஷா மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 2021ல் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.எடியூரப்பாவிடம் விசாரணையை தொடர உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா விசாரித்தனர்.மனு மீதான விசாரணை நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய விசாரணையின்போது, 'இந்த மனுவை, நாங்கள் விசாரிப்பதை விட, தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தால் பொருத்தமாக இருக்கும்' என நீதிபதிகள் கூறினர். மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டனர் -- நமது நிருபர் -.
05-Apr-2025