உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஊழியரை கொன்ற உரிமையாளர் கைது

 ஊழியரை கொன்ற உரிமையாளர் கைது

ஷிவமொக்கா: ஹோட்டல் ஊழியரை கொன்ற உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஷிவமொக்கா மாவட்டம் சாகர் நகரில் அமைந்துள்ள மொட்டை மாடி ஹோட்டலில், ஊழியராக பணிபுரிந்தவர் டிங்கு ஷர்மா, 30. இவருக்கும் ஹோட்டலின் உரிமையாளரான இம்ரானுக்கும் பண விவகாரத்தில் அடிக்கடி தகராறு நடந்து உள்ளது. இதே போல, நேற்று காலை தகராறு நடந்தது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். அப்போது, அங்கிருந்த பொருட்களை பயன்படுத்தி டிங்கு ஷர்மா மீது இம்ரான் தாக்குதல் நடத்தினார். இதில், ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த சாகர் போலீசார் இம்ரானை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை