வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உன்னோட சித்தார்த்தா கல்வி குழுமத்தில் இந்த இடஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்து
மேலும் செய்திகள்
வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 5% ஆக நீடிப்பு
16-Oct-2026
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.சி.,– எஸ்.டி., சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விகிதத்தை உயர்த்துவதற்கான சட்டத்தை, அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கக் கோரி பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோருக்கு துணை முதல்வர் பரமேஸ்வர் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக அரசு எஸ்.சி., சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடை 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம்; எஸ்.டி., சமூகத்தினருக்கான இடஒதுக்கீடை 3 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த 2022ம் ஆண்டில், மாநில அரசு சட்டம் இயற்றியது. இதற்கு 2023 ஜனவரியில் கவர்னரும் ஒப்புதல் கொடுத்தார். இட ஒதுக்கீடு விகிதத்தை அதிகரிக்கும்படி ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் பரிந்துரைத்தது. இந்த விகித உயர்வால் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 56 சதவீதமாக உயர்ந்தது. ஒரு மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இவ்வழக்கில், 56 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கடந்த அக்டோபரில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனால், எஸ்.சி., – எஸ்.டி., சமூகத்தினருக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக, மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடம் உள்ளது போல, கர்நாடகாவிலும், 56 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடம் உண்டு. இவ்விஷயத்தில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, எஸ்.சி., 17.15 சதவீதம், எஸ்.டி., 6.95 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இவர்கள் சமூகத்தில் முன்னேற இடஒதுக்கீடு விகிதத்தை அதிகப்படுத்துவதும் முக்கியமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உன்னோட சித்தார்த்தா கல்வி குழுமத்தில் இந்த இடஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்து
16-Oct-2026