உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓடும் ரயிலில் ஏற முற்பட்டு அபாயத்தில் சிக்கிய பயணி

ஓடும் ரயிலில் ஏற முற்பட்டு அபாயத்தில் சிக்கிய பயணி

கே.ஆர்.புரம் : ஓடும் ரயிலில் ஏற முயன்று, தண்டவாளத்தில் விழுந்த பயணியை, முன்னாள் ராணுவ வீரரும் ரயில்வே ஊழியரும் தக்க சமயத்தில் காப்பாற்றினர்.பெங்களூரின், கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தின் நடைமேடை 2ல், நேற்று முன்தினம் இரவு, மங்களூருக்கு புறப்பட எக்ஸ்பிரஸ் ரயில் தயாராக இருந்தது. இந்த ரயிலில் செல்ல ஒரு பயணி ரயில் நிலையத்துக்கு வந்தார். அவர் இரண்டாவது நடைமேடைக்கு வருவதற்குள், ரயில் நகர துவங்கியது.அவர் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார். அதற்குள் ரயில் வேகம் எடுத்திருந்தது. இதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். எனினும் கம்பியை பிடித்தபடி தொங்கினார். இதை நடைமேடையில் நின்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ், ரயில்வே ஊழியர் பிரதீப் குமார் பார்த்தனர். விரைந்து வந்து செயல்பட்டு, அபாயத்தில் இருந்த பயணியை பிளாட்பாரத்துக்கு இழுத்து காப்பாற்றினர்.லேசான காயங்களுடன் பயணி உயிர் தப்பினார். இச்சம்பவத்தால், ரயில் நிலையத்தில் சிறிது நேரம், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை