உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பேடரஹள்ளியில் சிறுத்தையால் மக்கள் கலக்கம்

 பேடரஹள்ளியில் சிறுத்தையால் மக்கள் கலக்கம்

பெங்களூரு: பெங்களூரின் பேடரஹள்ளி, பாரத்நகர் பூங்காவில் அவ்வப்போது சிறுத்தை நடமாடுகிறது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் சாலையில் சிறுத்தை நடமாடியது. இதை பார்த்தவர்கள் முதலில், இதை நாய் என தவறாக நினைத்தனர். ஆனால் பின்னரே, அது நாய் அல்ல சிறுத்தை என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுத்தை சிக்கவில்லை. அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். நாயை பார்த்தாலும் சிறுத்தை என, அலறுகின்றனர். சிறுத்தையை உடனடியாக பிடிக்கும்படி, வனத்துறையிடம் மன்றாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை