மேலும் செய்திகள்
பைக் டாக்சி போக்குவரத்து அரசுக்கு ஒரு மாதம் கெடு
21-Aug-2025
பெங்களூரு:மைசூரு தசராவை 'புக்கர்' பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கிவைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மனுவை, அவசர மனுவாக விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடப்பாண்டு மைசூரு தசராவை புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசின் முடிவை எதிர்த்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதாப் சிம்ஹா தரப்பு வக்கீல், 'ஒரு குறிப்பை வழங்கி, இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என்று கோரினார். இதற்கு நீதிபதிகள், 'இம்மனு எப்போது தாக்கல் செய்யப்பட்டது?' என்று கேட்டனர். அதற்கு வக்கீல், 'நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இது மிகவும் முக்கியமான மனு. தசரா பண்டிகை வரும் 22ம் தேதி துவங்குகிறது. எனவே, அவசர மனுவாக ஏற்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார். நீதிபதிகள், 'வழக்கம் போல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின் விசாரணை நடத்த திட்டமிடப்படும்' என்று கூறி, அவசர மனுவாக விசாரிக்க முடியாது' என, மறுத்துவிட்டனர்.
21-Aug-2025