நாளை பிக்கில்பால் போட்டி
பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெங்களூரில் நாளை பிக்கில்பால் போட்டி நடக்க உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், சவுரா மண்டல் அறக்கட்டளை, இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரு ஜெயமஹால் அரண்மனை எதிரில் சாமுண்டி ஹோட்டல் வளாகத்தில் உள்ள, கோரேலி பிக்கில்பால் உள்விளையாட்டு அரங்கில், பிக்கில்பால் போட்டி நடக்க உள்ளது. காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் இப்போட்டியில் ஏராளமான பிக்கில்பால் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த தெருவோர பெண் வியாபாரிகளுக்கு சோலார் மின்விளக்கு வாங்கிக் கொடுக்கவும், விற்பனை இடங்களை மேம்படுத்தவும் பயன்படுத்த உள்ளனர் - நமது நிருபர் - .