உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா யானைகளுடன் படம் எம்.எல்.ஏ., மகள்களால் சர்ச்சை

தசரா யானைகளுடன் படம் எம்.எல்.ஏ., மகள்களால் சர்ச்சை

மைசூரு: மைசூரு தசரா யானைகளுடன், புகைப் படம் எடுத்ததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் மகள்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள யானைகள், அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல யானைகள் நடைபயிற்சி செல்லும் சாலையிலும், மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகள்கள் வைஷாலி, தீபாலி ஆகியோர், தசரா யானைகளுடன் புகைப்படம் எடுத்ததுடன், நடைபயிற்சி செல்லும் சாலையிலும் சென்று, யானைகளுடன் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ‘அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலான நிலையில், ‘தசரா யானை விஷயத்தில் பொதுமக்களுக்கு ஒரு நியாயம், எம்.எல்.ஏ.,வின் மகள்களுக்கு ஒரு நியாயமா’ என, இணையவாசிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை