உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுமிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் மீது போக்சோ

 சிறுமிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் மீது போக்சோ

பெங்களூரு: குத்துச்சண்டை பயிற்சிக்கு சென்ற, 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த, குத்துச்சண்டை பயிற்சியாளர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவாகி உள்ளது. பெங்களூரு கஸ்துாரிபா சாலையில் உள்ள தனியார் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில், கடந்த சில ஆண்டுகளாக, 17 வயது சிறுமி பயிற்சி பெற்று வந்தார். இவரது பயிற்சியாளர் ராமசந்திரா, 50. இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று வந்தார் என கூறப்படுகிறது. கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க சிறுமியுடன், ராமசந்திராவும் சென்னைக்கு சென்றார். சிறுமி தனது அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது, ராமசந்திரா அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இங்கு நடந்ததை யாரிடமும் கூற கூடாது என அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமி தனது தாயிடம் கூறினார். அவர், சம்பங்கிராம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பயிற்சியாளர் ராமசந்திரா மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர். அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை