போலீசார் அதிரடி ரவுடிகள் கைது
பெங்களூரு: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, 12 ரவுடிகளை, ரவுடி ஒழிப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெங்களூரில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ரவுடி ஒழிப்பு படை போலீசார் ஈடுபட்டனர். நகரின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 12 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முகமது அலி, 26, மணிராஜ், 40, அயூப்கான், 39, ராஜு, 32, சஷாத் பாஷா, 26, நுதன், 26, சஷி குமார், 35, சதீஷ் குமார், 39, பிரோஸ் பாஷா, 28, பன்னீர் செல்வம், 45, நரசிம்மமூர்த்தி, 24, சாதிக் பாஷா, 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், அனைவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து, ரவுடி ஒழிப்பு படை டி.சி.பி., ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘‘ரவுடிகள் குற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்வது நல்லது. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும்,’’ என்றார்.