உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்ஷன் மனைவியின் ரூ.3 லட்சம் திருட்டு வழக்கில் போலீசார் திணறல்

தர்ஷன் மனைவியின் ரூ.3 லட்சம் திருட்டு வழக்கில் போலீசார் திணறல்

சி.கே.அச்சுக்கட்டு: நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி வீட்டில், மூன்று லட்சம் ரூபாய் திருட்டுப் போன வழக்கில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த 4ம் தேதி, தன் மேலாளர் நாகராஜிடம், மூன்று லட்சம் ரூபாயை கொடுத்து, படுக்கை அறை அலமாரியில் வைக்குமாறு கூறினார். அன்றைய தினமே விஜயலட்சுமி, மைசூரு சென்றுவிட்டார். கடந்த 8ம் தேதி மைசூரில் இருந்து திரும்பி வந்தார். அலமாரியை திறந்து பார்த்தபோது பணம் இல்லை. வீட்டு வேலைக்காரர்களிடம் கேட்டபோது, அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் வேலைக்காரர்கள் மீது சி.கே.அச்சுக்கட்டு போலீசில் நாகராஜ் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டு வேலைக்காரர்கள் நான்கு பேர், நாகராஜ், விஜயலட்சுமி மகன் வினேஷ், அவரது நண்பர்கள் 3 பேர் என, ஒன்பது பேரிடம் விசாரித்தனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை தீர்க்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். உண்மையிலேயே பணம் திருடு போனதா என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை