உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்., - எம்.எல்.ஏ., மீது போலீசில் புகார்

காங்., - எம்.எல்.ஏ., மீது போலீசில் புகார்

பெங்களூரு : ஆப்பரேஷன் சிந்துார் குறித்து அருவருக்கத்தக்க கருத்துகளை கூறிய காங்., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத். இவர் ஆப்பரேஷன் சிந்துார், நம் ராணுவம் குறித்து அருவருக்கத்தக்க கருத்துகளை கூறினார்.இதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட பலர் கடுமையாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று சிவில் உரிமைகள் போராட்டக் குழு துணைத் தலைவர் கணேஷ் சிங், நேற்று பனசங்கரி போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத் எம்.எல்.ஏ., மீது புகார் அளித்து உள்ளார்.புகாரில், 'மஞ்சுநாத் ஆப்பரேஷன் சிந்துார் குறித்து இழிவாக பேசி உள்ளார். நம் ராணுவத்தை தவறாக பேசியதால் பொது மக்களின் மனம் புண்பட்டு உள்ளது. மஞ்சுநாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி