அணிவகுப்பு மரியாதையுடன் போலீஸ் கொடி தினம்
தங்கவயல்: தங்கவயல் சாம்பியன் ரீப் ரிசர்வ் போலீஸ் அணிவகுப்பு திடலில் போலீஸ் கொடி தினம் நேற்று நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ரிசர்வ் போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் பங்கேற்றார். அப்போது, எஸ்.பி., சாந்தராஜ் பேசுகையில், “போலீஸ் துறையில் பலர் சிறப்பான சேவையை செய்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வழிகாட்டுதல் தற்போதுள்ள போலீசாருக்கு அவசியம் தேவை. அவர்களின் வழிகாட்டுதலால் குற்றங்களை தடுக்க முடியும். எனவே, அவர்களின் சேவையை மதிக்க வேண்டும் கவுரவிக்க வேண்டும்,” என்றார்.இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் இந்திரா காந்தி, அரசு ஊழியர் சங்க தலைவர் நரசிம்மமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.