உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசியல் விவகார குழு விரைவில் அமைப்பு

 அரசியல் விவகார குழு விரைவில் அமைப்பு

பெங்களூரு: ''கர்நாடகாவில் விரைவில் அரசியல் விவகார குழு அமைக்கப்படும்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டி: பிற மாநிலங்களில் அரசியல் விவகார குழுக்கள் உள்ளன. கட்சிக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு ங்கிணைப்பை ஏற்படுத்த, தேர்தல் உத்திகள் தயாரிக்க உள்ளிட்ட காரணங்களுக்காக கர்நாடகாவில் அரசியல் விவகார குழு விரைவில் அமைக்கப்படும். காங்கிரஸ் பொது செயலர் கே.சி.வேணு கோபால், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலாவின் ஆலோசனையின் பெயரில் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு அமைப்பது குறித்து சக தலைவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. துளு மொழிக்கு அங்கீகாரம் வழங்கியதில் சிலர் அரசியல் செய்கின்றனர். ஜனார்த்தன ரெட்டி போன்ற மூளை இல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை. கனிமவள கொள்ளை வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், மாநில அரசுக்கு அறிவுரை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் குறித்து பேச பா.ஜ., தலைவர்களுக்கு தகுதியில்லை. மாநில அரசில் ஊழல் நடந்ததாக கூறும் வீடியோ, ஆடியோக்கள் இருந்தால் தாராளமாக வெளியிடுங்கள். நாங்களும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் வீடியோவை வெளியிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை