உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பீஹார் தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம்

பீஹார் தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம்

பீதர்: ''பீஹார் தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும்,'' என, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கணித்துள்ளார். பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பீஹார் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நிதிஷ் குமார் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் முதல்வராக இருந்தாலும், அம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, பீஹார் மக்கள் முன் நாடகம் போடுகிறார். இம்முறை அவரது நாடகம் பலிக்காது. பீஹார் தேர்தலுக்கு பின், நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும். மாற்றத்துக்கான காற்று வலுவாக வீசிக் கொண்டு இருக்கிறது. ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு பா.ஜ., வெற்றி பெற்றது, நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. பா.ஜ.,வுக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை