மேலும் செய்திகள்
பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்
3 hour(s) ago
போக்குவரத்து துறைக்கு ரூ.7,000 கோடி நிதியுதவி
3 hour(s) ago
பெண்ணுக்கு கொடுமை போலீசார் மீது குற்றச்சாட்டு
3 hour(s) ago
மைசூரு: மசூதி அருகே விநாயகர் ஊர்வலம் செல்ல தடை விதித்த விவகாரத்தில், ' 'போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவ ே ன ் '' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆவேசமாக பேசியுsள்ளார். மைசூரு டி.நரசிபுராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில், 'லிங்க் ரோட்டில் உள்ள மசூதி தெருவில் விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது; இதை மீறுவோர் கைது செய்யப்படுவர்' என, டி.நரசிபுரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனஞ்சய் கூறினார். இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் தனஞ்சய் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா நேற்று அளித்த பேட்டி: விநாயகர் சதுர்த்தியின் போது மசூதிகள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், மொஹரம், பக்ரீத் பண்டிகையின் போது கோவில்களுக்கு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு சென்ற இளைஞர்களை இன்ஸ்பெக்டர் தனஞ்சய் மிரட்டியுள்ளார். அப்பாவி இளைஞர்களிடம் உங்கள் வீரத்தை காண்பிக்காதீர்கள். முடிந்தால் என்னிடத்தில் காண்பியுங்கள். போலீஸ் உடையை அணிந்து கொண்டு ரவுடி போல பேசாதீர்கள். இதே போன்று மீண்டும் நடந்து கொண்டால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவேன். ஒரு வேளை உங்கள் வீட்டுக்கு சமூக விரோதிகள் யாரெனும் தீ வைத்தால் பஜ்ரங் தள், ஹிந்து பரிஷத் அமைப்பினரே உதவிக்குவருவார்கள். வேறு யாரும் உதவ மாட்டார்கள். இதை மறந்து விட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago