உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மரம் விழுந்ததில் உயிர் தப்பிய கர்ப்பிணி

மரம் விழுந்ததில் உயிர் தப்பிய கர்ப்பிணி

உத்தரகன்னடா : கார்வாரில் பெரிய அளவிலான மரம் விழுந்ததில், பெண்ணொருவர் பலத்த காயம் அடைந்தார். கர்ப்பிணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் நகரின் குர்னிபேட் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி பாகி, 56. இவரது மருமகள் சுனிதா, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். சுனிதா மருத்துவ பரிசோதனைக்காக, தன் மாமியாருடன் நேற்று காலையில் நர்சிங் ஹோமுக்கு காரில் புறப்பட்டார்.கார்வார் நகரின், பிகளே சாலையில் உள்ள நர்சிங் ஹோம் வளாகத்தில் காரை நிறுத்தினர். அப்போது அங்கிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதை பார்த்து ஓட்டுநர் அலறினார். சுனிதா உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். ஓட்டுநரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஆனால் லட்சுமி, காரில் சிக்கி கொண்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கிரேன் வரவழைத்து, மரத்தை அப்புறப்படுத்தி காரில் சிக்கியிருந்த லட்சுமியை மீட்டனர். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி