மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்
03-Sep-2025
மைசூரு : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மைசூருக்கு வந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அரண்மனையை சுற்றிப்பார்த்த பின், சென்னைக்கு புறப்பட்டார். கர்நாடகத்தின் அரண்மனை நகரமான மைசூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று முன்தினம் வந்திருந்தார். மைசூரில் உள்ள காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் மையத்தின் வைர விழாவில் பங்கேற்றார். பின், மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவியின் வேண்டுகோளை ஏற்று, நேற்று காலை அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அவரை, மைசூரு பா.ஜ., - எம்.பி.,யும், மன்னர் குடும்பத்தின் யதுவீர், அவரது தாய் பிரமோதா தேவி வரவேற்றனர். ஜனாதிபதியுடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் வந்திருந்தார். மைசூரின் பாரம்பரிய உணவான மசால் தோசை, இட்லி, சாம்பார், சட்னி, மைசூரு பாக், கோதுமை அல்வா, பாதம் அல்வா, கேழ்வரகு களி, பிஸ்கட், டீ, காபி ஆகியவை பரிமாறப்பட்டன. உணவுகளை ருசித்த அவர், அவற்றின் சுவையை பாராட்டினார். பின், அரண்மனையின் சில பகுதிகளை சுற்றிப்பார்த்தார். அப்போது பிரமோதா தேவி, ''எங்களின் அழைப்பை ஏற்று, அரண்மனைக்கு வந்தது மகிழ்ச்சி,'' என்றார். தன்னை உபசரித்த பிரமோதா தேவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து சென்னைக்கு சென்ற ஜனாதிபதியை முதல்வர் சித்தராமையா வழியனுப்பி வைத்தார். மைசூரு அரண்மனைக்கு வந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன், கவர்னர் தாவர்சந்த் கெலாட், மன்னர் குடும்பத்தினர் குழு படம் எடுத்துக் கொண்டனர்.
03-Sep-2025