உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்

ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் தனியார் தர்பார்

மைசூரு அரண்மனையில் பாரம்பரிய நவராத்திரி சடங்குகள் துவங்கின. அரண்மனையில் நேற்று காலை மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், பூஜைகளை துவங்கினார். வாணிவிலாஸ் தேவரா வளாகத்தில் யதுவீருக்கு, அவரது மனைவி திரிஷிகா குமாரி, பாத பூஜை, ஆரத்தி நடத்தினார். அவரது மகன் ஆத்யவீர் நரசிம்மராஜ உடையாரும் பூஜை செய்தார். அரண்மனை வளாகத்தில் உள்ள கோடி சோமேஸ்வரர் கோவில் அருகில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் யானை, பசு, குதிரை, ஒட்டகங்கள் வந்தன. பகல் 12:42 முதல் 12:58 மணிக்குள் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, தனி தர்பார் நடத்தினார். இது அவருக்கு 11வது முறை. அதை தொடர்ந்து, சாமுண்டி மலை சாமுண்டஸ்வரி தேவி, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா, ஸ்ரீரங்கபட்டணா ரங்கநாதர், ஜ்வாலாமுகி திரிபுரசுந்தரி, உத்தனஹள்ளி கோடி சோமேஸ்வரி உட்பட 23 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், தனியார் தர்பார் அரங்கம் முழுதும் தெளிக்கப்பட்டது. 23_Mysore_0005, 23_Mysore_0006 மலை அடிவாரத்தில் குவிக்கப்பட்டிருந்த அதிரடி படையினர். (அடுத்த படம்) சாமுண்டீஸ்வரி கோவில் அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கேட்டறிந்தார். அறிவிக்கப்படாத தடை! தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதற்கு பா.ஜ., ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 'விழாவின்போது முதல்வருக்கு கருப்புக் கொடி காண்பிப்போம்' என, எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், மைசூரு தசரா வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு சாமுண்டி மலையில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விழாவுக்கு வந்தவர்கள் கூட, கூட்டம் கூட்டமாக அனுமதி அளிக்கப்படவில்லை. விழா நடக்கும் பகுதியிலும், வெளியேயும், மலை அடிவாரத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதன் முறையாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, பொது மக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் பாதுகாப்பில் நின்றிருந்த போலீசார், விழாவுக்கு வருவோரிடம் பாஸ் உள்ளதா என்பதை பார்த்த பின்னரே, அனுமதித்தனர். தவிர, மலையில் உள்ள பஸ் நிலையத்தில், மூன்று அடக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிரடி போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பானு முஷ்டாக், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதற்கு முன்னர், இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. 23_Mysore_0007, 23_Mysore_0008 மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம். (அடுத்த படம்) ஆப்பரேஷன் சிந்துார் மலர் அலங்காரம். ============ துவங்கியது மலர் கண்காட்சி ============ தோட்டக்கலை துறை, மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து இணைந்து நகரின் குப்பண்ணா பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், மலர் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர், அங்குள்ள உணவு ஸ்டால்களுக்கும் சென்றார். அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் தசரா நிறைவு நாளை முன்னிட்டு, இம்முறை கண்காட்சியில், 3 லட்சம் மலர்களால், தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் முன்பாக, காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியில், அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் எதிரொலித்தன. 'ஆப்பரேஷன் சிந்துாரின்' வெற்றி குறித்து, ராணுவ வீராங்கனை சோபியா குரேஷி, விமானப்படை கமாண்டர் வயோமிகா சிங்கை கவுரவிக்கும் வகையில், மலர்களால் அவர்களின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தன. இது தவிர, சாமுண்டி மலையில் உள்ள நந்தி, மைசூரு மன்னர்களின் சிலைகள், தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானை, டால்பின்கள் இடம் பெற்றிருந்தன. அதுபோன்று, நகரின் கர்சன் பூங்காவில் இன்று பெண்கள், குழந்தைகளுக்கான கோலப்போட்டி; 24ல் மலர் கோலப்போட்டி; 25ல் இந்திய மலர் கலை அலங்காரம்; 26ல் காய்கறிகளில் சிற்பங்கள்; 27ல் ஜப்பானி கலையான செடிகளை அலங்கரிக்கும் இக்கிபானா கலை; 28ல் ஓவிய போட்டிகள் நடக்க உள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி