உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குப்பை வீசியதை தட்டிக்கேட்ட பேராசிரியர் மீது தாக்குதல்

குப்பை வீசியதை தட்டிக்கேட்ட பேராசிரியர் மீது தாக்குதல்

ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட் : பெங்களூரு, தயானந்த சாகர் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அரபிந்தோ குப்தா. நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.குமாரசாமி லே - அவுட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கார் ஒன்று முந்திச் சென்றது.காரில் இருந்தவர்கள் சாலையில் குப்பை, பாட்டில்களை கொட்டினர். இதனால் அரபிந்தோ குப்தா சற்று தடுமாறினார். கார் அருகில் சென்று, 'சாலையில் குப்பை கொட்டினால், மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுவர்' என்றார்.இதனால் காரில் இருந்த மூவரும் கோபமடைந்து, கீழே இறங்கினர். அரபிந்தோ குப்தாவை இருவர் பிடித்துக் கொள்ள, ஒருவர் அவரை சரமாரியாக தாக்கினார். பின், அங்கிருந்து தப்பிவிட்டனர்.அரபிந்தோ குப்தா அங்கிருந்தபடி குமாரசாமி லே - அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின், அவர் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்தனர். அவரை தாக்கியவர்களை கண்டுபிடிக்க, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை