உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பழைய குடிநீர் குழாய்களை மாற்றி தண்ணீர் கசிவை குறைக்க திட்டம்

பழைய குடிநீர் குழாய்களை மாற்றி தண்ணீர் கசிவை குறைக்க திட்டம்

பெங்களூரு:பழைய இரும்பு குடிநீர் குழாய்களை மாற்றுவதன் மூலம், தண்ணீர் கசிவை 10 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. பெங்களூரில் குடிநீர் வினியோகம், கழிவுநீரை சுத்திகரிப்பது, குடிநீர் சுத்திகரிப்பு செய்வது உள்ளிட்ட பணிகளை பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் செய்து வருகிறது. இதில், நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்பு குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சில குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இது நகரில் வினியோகிக்கப்படும் குடிநீருடன் ஒப்பிடுகையில், வீணாகும் குடிநீர் 28 சதவீதமாக உள்ளது. ரூ.200 கோடி இதை தடுக்க குடிநீர் வாரியம் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் பதிக்கப்பட்ட இரும்பு குழாய்கள் மாற்றப்படும். இதன் மூலம் குடிநீர் கசிவு நிறுத்தப்படும்; குடிநீர் சேகரிக்கப்படும். முதல் கட்டமாக 200 கி.மீ., நீளமுள்ள குழாய்கள் மாற்றப்பட உள்ளது. இதற்காக 200 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது: சிவாஜிநகர், பேட்ராயனபுரா, சி.வி.ராமன் நகர், சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் உள்ள 40 ஆண்டுகளுக்கும் மேலான குடிநீர் வினியோகத்துக்கு பயன்படும் இரும்பு குழாய்கள் மாற்றப்படும். இதன் மூலம், வீணாகும் குடிநீரின் அளவு 10 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்படும்; திருட்டு இணைப்புகள் துண்டிக்கப்படும். இது போன்ற திட்டம் 2018 - 2019ல் நடந்தது. 680 கி.மீ.,க்கு குழாய்கள் மாற்றப்பட்டன. இதில் கிடைத்த வெற்றியின் மூலமே தற்போது புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்; குடிநீர் வாரியத்தின் நஷ்டம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை