உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம்

ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம்

ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண மஹோத்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷனின், பெங்களூரு ஜே.பி., நகர் கிளை சார்பில், மூன்றாவது ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம் நேற்று ஜெயநகர் 9வது பிளாக், ஈஸ்ட் என்ட் 'ஏ' மெயின் ரோட்டில் உள்ள, ஸ்ரீராம மண்டலியில் துவங்கியது. காலையில் விக்னேஸ்வர பூஜைக்கு பின், தோடயமங்களம், குருகீர்த்தனை, அஷ்டபதி நடந்தது. மாலை முதல் இரவு வரை அஷ்டபதி, பஞ்சபதி பூஜை, திவ்யநாமம் நடந்தது. இவை அனைத்தும் ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தலைமையில் நடந்தது. இதில், ஜே.பி., நகர் கிளை தலைவர் புவனேஸ்வரன், பொதுச் செயலர் சாரதா, இளைஞர் அணி செயலர்கள் அரவிந்த் ஸ்ரீராம், சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, கீதா விஸ்வநாதன், சுதா, பெங்ளூரு மாநகர கன்வீனர் அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இன்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி; 9:00 மணிக்கு ராதா கல்யாண மஹோத்சவம்; மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை