உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சதீஷ் ஜார்கிஹோளியுடன் ராஜண்ணா ஆலோசனை

 சதீஷ் ஜார்கிஹோளியுடன் ராஜண்ணா ஆலோசனை

பெங்களூரு: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கி ஹோளி, டில்லி செல்ல தயாராகிறார். இதற்கிடையே, அவரை முன்னாள் அமைச்சர் ராஜண்ணா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, அமைச்சர் பதவியை இழந்தவர் ராஜண்ணா. பொங்கல் பண்டிகை முடிந்த பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் வாய்ப்புள்ளதால், மீண்டும் அமைச்சர் பதவியில் அமர ராஜண்ணா முயற்சிக்கிறார். இவர், முதல்வர் சித்தராமையா கோஷ்டியில் உள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை, ராஜண்ணா பெங்களூரில் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சதீஷ் ஜார்கிஹோளி அளித்த பேட்டி: தினமும் என்னை சந்திக்க பலர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் வருவர். அதேபோன்று ராஜண்ணா வந்திருந்தார். இதற்கு தனி அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை. நான், என் தனிப்பட்ட பணி நிமித்தமாக டில்லி செல்கிறேன். அங்கு நாங்கள் புதிய கட்டடம் கட்டுகிறோம். அதை பார்வையிடுவதற்காக செல்கிறேன். அரசியல் குறித்து ஆலோசிப்பதற்காக நான் டில்லி செல்லவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து ஆலோசனை நடக்கிறது. ஆனால், எப்போது மாற்றம் நிகழும் என்பது தெரியாது. முதல்வர் மாற்றம் தொடர்பாக ஆலோசிக்கவில்லை. இது பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை