உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராஜண்ணா ராஜினாமா மேல்சபையில் விவாதம்

ராஜண்ணா ராஜினாமா மேல்சபையில் விவாதம்

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ராஜண்ணாவை, அமைச்சரவையில் இருந்து நீக்கியது குறித்து, மேல்சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, சிறிது நேரம் கடுமையான வாக்குவாதம் நடந்தது. மேல்சபை பூஜ்ய நேரத்தில், நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி: அமைச்சரவையில் இருந்து, ராஜண்ணாவை நீக்கியது குறித்து, இரண்டு நாட்களுக்கு முன், நாங்கள் கேள்வி எழுப்பிய போது, முதல்வர் சபையில் இருக்கவில்லை. இன்று (நேற்று) சபைக்கு முதல்வர் வந்துள்ளார். அவரிடம் பதில் பெற்று தாருங்கள். ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு காரணங்கள் என்ன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தா அல்லது வேறு ஏதாவது காரணமா. அமைச்சர் போசராஜு: அது முடிந்த அத்தியாயம். இது பற்றி கேள்வி எழுப்பும் அதிகாரம், எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. முதல்வர் பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: ஏற்கனவே யார் என்ன கூற வேண்டுமோ, அதை கூறியுள்ளனர். அதே விஷயத்தை சபையில் மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது முடிந்த போன அத்தியாயம். முதல்வர் சித்தராமையா: ராஜண்ணா ராஜினாமா செய்தது, எங்கள் கட்சியின் தனிப்பட்ட விஷயமாகும். இது பற்றி சபையில் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்த போது, காரணங்களை கூறினரா. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை