உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனித மதிப்புகளை மீட்டெடுப்பதில் ஸ்ரீ சத்ய சாய்பாபா பணி மகத்தானது ராஜஸ்தான் கவர்னர் புகழாரம்

மனித மதிப்புகளை மீட்டெடுப்பதில் ஸ்ரீ சத்ய சாய்பாபா பணி மகத்தானது ராஜஸ்தான் கவர்னர் புகழாரம்

'ஸ்ரீ சத்ய சாய் - மனித மதிப்புகள்' எனும் மாநாடு, புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தில் நேற்று துவங்கியது.ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவன மாணவர்களின் வேத பாராயணங்களுடன் நிகழ்ச்சி துவங்கியது.ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே பேசுகையில், ''மனித வாழ்வில், மனித மதிப்புகளை மீட்டெடுப்பதில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பணி மகத்தானது; அளப்பரியது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவின் வளமான பாரம்பரியம் இருந்தது. குருகுலக் கல்வி மதிப்பு அடிப்படையிலான சமூகத்தின் முதுகெலும்பாக இருந்தது. இது இந்தியாவின் ஆன்மிக ஞானம், தார்மிக வலிமையை அடிக்கோடிட்டு காட்டியது,'' என்றார்.முன்னதாக, ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் தலைவர் நிமிஷ் பாண்டியா வரவேற்றார். கொல்கட்டா ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் சுவாமி சர்வோத்தமானந்தா, ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவன தலைவர் சுமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். -- -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி