உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமார சுவாமிகள் ஜெயந்தி ஏப்.1ல் வருகிறார் ராஜ்நாத் சிங்

சிவகுமார சுவாமிகள் ஜெயந்தி ஏப்.1ல் வருகிறார் ராஜ்நாத் சிங்

துமகூரு : சித்தகங்கா மடத்தில், ஏப்ரல் 1ம் தேதி சிவகுமார சுவாமிகளின் 118வது ஜெயந்தி மற்றும் குரு வந்தனம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.இதுதொடர்பாக, துமகூரின் சித்தகங்கா மடம் வெளியிட்ட அறிக்கை:சித்தகங்கா மடத்தில், ஏப்ரல் 1ம் தேதி சிவகுமார சுவாமிகளின் 118வது ஜெயந்தி மற்றும் குரு வந்தனம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகிறார்.துணை முதல்வர் சிவகுமார், நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கிறார். சுத்துார் மடாதிபதி உட்பட, பலர் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சோமண்ணா, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா என, பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பர்.குரு வந்தனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, மடத்தின் ஐந்து இடங்களில், அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை