உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாமின் கேட்டு ரன்யா மனு டி.ஆர்.ஐ.,க்கு நோட்டீஸ்

ஜாமின் கேட்டு ரன்யா மனு டி.ஆர்.ஐ.,க்கு நோட்டீஸ்

பெங்களூரு: தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் ஜாமின் மனு தொடர்பாக, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில், கைதான நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி விசாரிக்கிறார். நேற்று மனு மீது விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, நடிகை ஜாமின் மனு தொடர்பாக பதில் அளிக்க, டி.ஆர்.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை, 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை