உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கம் கடத்துவதற்கு டீல் பேசுவதற்காக துபாயில் நிறுவனம் துவங்கிய ரன்யா ராவ்

தங்கம் கடத்துவதற்கு டீல் பேசுவதற்காக துபாயில் நிறுவனம் துவங்கிய ரன்யா ராவ்

பெங்களூரு: தங்கம் கடத்தலுக்கு டீல் பேசுவதற்காக ரன்யா ராவ், துபாயில் நிறுவனம் துவங்கினார் என, வருவாய் புலனாய்வு பிரிவினரிடம் தருண் கொண்டாரு ராஜு கூறி உள்ளார்.துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ், 33, கைதாகி தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தொழிலதிபரும், ரன்யாவின் முன்னாள் காதலருமான தருண் கொண்டாரு ராஜுவும் கைதானார். 'சிலரது மிரட்டலுக்கு பயந்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன். துபாயில் இருந்து தனக்கு யார் தங்கக் கட்டிகள் கொடுப்பர் என்பது கூட எனக்கு தெரியாது,” என, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முன், ரன்யா கூறி இருந்தார்.ஆனால் தருணிடம் நடத்திய விசாரணையில், ரன்யா பொய் சொன்னது என்பது தெரிய வந்துள்ளது. விசாரணையின் போது, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் தருண் கொண்டாரு ராஜு கூறியதாக வெளியான தகவல்கள்:நானும், ரன்யாவும் சேர்ந்து 2023ல் துபாயில் ஒரு நிறுவனத்தை துவங்கினோம். அங்கு வைத்து தான் தங்கம் கடத்தி வருவதற்கு, ரன்யா பலரிடம் டீல் பேசினார். ஹவாலா பணமும் அந்த நிறுவனத்தில் வைத்து தான் மாற்றப்பட்டது. துபாயில் இருந்து மட்டும் இல்லை. ஜெனிவா, பாங்காங்கில் இருந்தும் ரன்யா தங்கம் கடத்தி வந்தார்.தங்கம் கொடுக்கும் விஷயத்தில், துபாயை சேர்ந்த ஒருவர் எங்களை ஏமாற்றி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்தார். ஹவாலா பண பரிமாற்றத்தில் ரன்யாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஜெனிவாவில் தங்கத்தை விற்பனை செய்யும் மையம் உள்ளதால், துபாயில் இருந்து தங்கத்தை வாங்கும் ரன்யா ராவ், விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம், ஜெனிவா செல்வதாக கூறினார். இதில் என் பெயரையும் பயன்படுத்தி உள்ளார். தங்கம் கடத்திய வழக்கில் மூளையாக செயல்பட்டதே ரன்யா தான்.இவ்வாறு தருண் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.தருண் வாக்குமூலத்தால் ரன்யாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரன்யா தங்கம் கடத்தி வந்தது குறித்து, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை