பெங்களூரில் ரவுடி, ஆட்டோ டிரைவர் கொலை
ஹலசூரு : பெங்களூரில் ஒரே நாளில் ரவுடி, ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள, செயின்ட் ஜான்ஸ் சாலையில் வாடகை வீட்டில் வசித்தவர் சிவகுமார், 46. ரவுடியான இவர் மீது பாரதிநகர், ஹலசூரு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.நேற்று இரவு 8:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள, ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள், சிவகுமாரை அரிவாளால் வெட்ட முயன்றனர்.தப்பி ஓடிய அவர், இரண்டு கார்களுக்கு நடுவில் ஒளிந்து கொண்டார். ஆனாலும் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர்.தகவல் அறிந்த கிழக்கு மண்டல இணை கமிஷனர் ரமேஷ் பானுாத், டி.சி.பி., தேவராஜ், ஏ.சி.பி., கீதா, பாரதிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிவகுமாரை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுபோல ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் துாரத்தில், நேற்று மதியம் ஒரு ஆட்டோ நின்றது.ஆட்டோவுக்குள் அமர்ந்து இருந்த டிரைவர் தர்ஷன், 30, என்பவரை, ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.