உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த ரவுடி சுட்டு பிடிப்பு

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த ரவுடி சுட்டு பிடிப்பு

பெலகாவி:திருட்டு, பலாத்கார வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., பீமாசங்கர் குலேத் நேற்று கூறியதாவது: எம்.கே.ஹூப்பள்ளியில் கடந்த 23ம் தேதி செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. வழக்குப் பதிவு செய்த கித்துார் போலீசார், ஐந்து பேர் கொண்ட செயின் பறிப்பு கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இக்கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோகாக் தாலுகாவின் பெனசினமரடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் திலாரி தலைமையில் செயல்பட்டது தெரியவந்தது. போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ரமேஷ் திலாரியை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். அவர்களை கத்தியால் தாக்க ரமேஷ் முற்பட்டார். போலீசார், அவரை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி சுட்டனர். அப்போது அவர் போலீசாரை தாக்க முற்பட்டதால், எஸ்.ஐ., பிரவீன், ரமேஷ் திலாரியின் காலில் சுட்டார். படுகாயம் அடைந்த ரமேஷ், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கூட்டு பலாத்காரம் உட்பட ஒன்பது வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இவர் மீது நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், ஏற்கனவே ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ