உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோதண்டராமர் கோவில் புனரமைக்க ரூ.15 கோடி

கோதண்டராமர் கோவில் புனரமைக்க ரூ.15 கோடி

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமா கோவில் திருப்பணிகளுக்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி தெரிவித்தார்.இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பங்கார்பேட்டை கோதண்டராமர் கோவிலை புனரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கனவு. இந்த நிலையில், இந்த கோவிலின் ஆண்டு விழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.விழாவில் கலந்து கொண்ட பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி கூறியதாவது:இக்கோவில் திருப்பணிகளுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கோவில் கட்டடம் மட்டுமல்ல; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவிலின் தேர் சக்கரம் உடைந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. அவை சரி செய்யப்படும். கடவுள் வழிபாடு மிக அவசியம். ஆன்மிகத்தில் ஈடுபட்டால் குற்றங்கள் குறையும்.கல்வி அறிவுக்காக எப்படி பள்ளிகளுக்கு அனுப்புகிறோமோ, அதேபோல கோவிலுக்கும் குழந்தைகளை அனுப்பும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்போது தான் வீடும் நாடும் நலம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு, தாசில்தார் வெங்கடேஷ், இந்து அறநிலையத் துறையின் மாவட்ட அதிகாரி செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ