உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் முதியவரிடம் ரூ.18 லட்சம் அபேஸ்

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் முதியவரிடம் ரூ.18 லட்சம் அபேஸ்

காக்ஸ் டவுன்: முதியவரிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' பெயரில், 17.95 லட்சம் ரூபாய் பறித்த நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் காக்ஸ் டவுனில் வசிப்பவர் விஸ்வநாதன், 67. அக்டோபர் 10ம் தேதியன்று, இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒரு மர்மநபர் ஒருவர், 'நான் மும்பையின் கொலாபா போலீஸ் நிலையத்தில் இருந்து, எஸ்.ஐ., பேசுகிறேன். ' பி.எப்.ஐ.,யுடன் தொடர்பு கொண்ட அமைப்புக்கு பண பரிமாற்றம் செய்த வழக்கில், உங்களின் பெயர் உட்பட, மற்ற விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' என மிரட்டினார். அதன்பின் பலர், அதிகாரிகளின் பெயரில் விஸ்வநாதனை தொடர்பு கொண்டு பேசினர். 'உங்களின் ஆதார் கார்டு, தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது' என கூறி. போலியான எப்.ஐ.ஆர்., பிரதி, பி.எப்.ஐ., அமைப்பு உறுப்பினரின் போட்டோ, மும்பை போலீசாரின் அடையாள அட்டை உட்பட சில ஆவணங்களை விஸ்வநாத்தின் வாட்ஸாப்புக்கு அனுப்பினர். உங்களின் சொத்து பற்றி விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை உங்கள் கணக்கில் உள்ள பணத்தை, எங்கள் கணக்கில் பரிமாற்றம் செய்யுங்கள். விசாரணை முடிந்த பின், திருப்பி அனுப்புவோம் என்றனர். இதை நம்பிய விஸ்வநாதன், தன் கணக்கில் இருந்த 17.95 லட்சம் ரூபாயை, அந்நபர்கள் கூறிய கணக்குக்கு மாற்றினார். அதன்பின் அவர்கள் தொடர்பை துண்டித்தனர். நான்கைந்து நாட்களாகியும், பணம் திருப்பி வரவில்லை. மோசம் போனதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தன் பணத்தை மீட்டு தரும்படி வேண்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை